பொது ஜனவரி 16,2021 | 18:55 IST
பருவம் தவறி மார்கழியில் பெய்த தொடர் மழையால், விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்து இருப்பதால், விவசாயிகள் துயரத்தில் உள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு உடனடியாக ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மார்கழி மாத மழை சேதம் இனிமேல்தான் கணக்கெடுப்போம் என முதல்வர் கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது. வாய்கால்களை தூர்வாரும் பணியில் கோட்டை விட்ட அதிமுக அரசு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதிலும் குறட்டை விட்டு தூங்குகிறது. ஏற்கனவே புயல் நிவாரணமாக அரசு அறிவித்த 600 கோடி ரூபாய், மத்திய அரசிடம் கோரிய 3700 கோடி ரூபாய் நிதி என்ன ஆனது என்று ஸ்டாலின் கேட்டுள்ளார்.
வாசகர் கருத்து (5) வரிசைப்படுத்து:
இந்த உளறல் மன்னன் எதையாவது அடித்துவிட வேண்டியது நம் முதல்வர் சிக்ஸர் அடித்து விளையாட ஆரம்பிப்பார்.
மேலும் 4 கருத்துக்கள்...