Advertisement

பயம் வேண்டாம் என அட்வைஸ்

பொது ஜனவரி 16,2021 | 22:15 IST

Share

தமிழகத்துக்கு 5.56 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில், 5.36 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள். 20,000 கோவேக்சின் தடுப்பூசிகள். தடுப்பூசிகள் பற்றிய நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில், மருத்துவத்துறையில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். சென்னையை பொறுத்தவரையில் அரசு பொது மருத்துவமனையின் டீன் டாக்டர் தேரனி ராஜன் முதல் நபராக கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். அவர் கூறுகையில், சோர்வோ மயக்கமோ இல்லை; மக்கள் தைரியமாக தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்; எல்லாரும் போட்டுக்கொண்டால்தான் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்; கொரோனா அச்சுறுத்தலை முறியடித்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என தேரனி ராஜன் கூறினார். டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேைஷயன், அப்போலோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, இஎன்டி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன் காமேஸ்வரன், கண் மருத்துவர் மோகன் ராஜன், எம்ஜிஎம் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன் ஆகியோரும் முதலில் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரபலங்கள் ஆவர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த முயற்சிகளை பாராட்டிய பிரதாப் சி ரெட்டி, இந்தியாவில்தான் இறப்பு விகிதம் மிகவும் குறைவு என்றார். டாக்டர் பிரதாப் சி ரெட்டி தலைவர், அப்போலா குழுமம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி, மதுரை அரசு மருத்துவமனை டீன் சங்குமணி உட்பட தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் டீன்கள், மெடிக்கல் கவுன்சில், டாக்டர்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் முதலில் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். டாக்டர் செந்தில் மாநில தலைவர், இந்திய மருத்துவ கவுன்சில் தமிழகத்தில் 166 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது. 6 லட்சம் மருத்துவத்துறை பணியாளர்களுக்கு 15 நாளில் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

M S RAGHUNATHAN
M S RAGHUNATHAN , இந்தியா. 17-ஜன-2021 | 06:27:05 IST Report Abuse

தடுப்பூசி போடுவதை எதிர்க்கும் தலைவர்களுள் இதை எந்த காலத்திலும் செலுத்த கூடாது.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X