Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM | 17-01-2021 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் ஜனவரி 17,2021 | 13:00 IST

Share

குஜராத்தில் உள்ள கேவடியா பகுதியில் உலகின் மிக உயரமான ஒற்றுமைச் சிலை அமைந்துள்ளது. இந்த சிலைக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்விதமாக, 8 நகரங்களில் இருந்து கேவடியா நகருக்கு ரயில் சேவையை இன்று பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். நான் தொடங்கி வைத்த ரயில்களில் ஒன்று, சென்னையில் உள்ள எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கேவடியாவுக்கு புறப்பட்டுள்ளது. என்னவொரு அழகான தற்செயல் நிகழ்வு பாருங்கள். இன்று எம்ஜிஆரின் பிறந்த நாள் என மோடி குறிப்பிட்டார். ஏழைகளுக்கு சேவை செய்வதற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட உன்னத தலைவர் எம்ஜிஆர் எனவும் மோடி புகழாரம் சூட்டினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X