Advertisement

கொரோனா ஒழியும் என அமித்ஷா பேச்சு

பொது ஜனவரி 17,2021 | 19:25 IST

Share

கர்நாடக மாநிலம் பகல்கோட்டில் Bagalkot நடந்த பாஜக கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கொரோனா தடுப்பூசி பற்றி காங்கிரஸ் கேள்வி எழுப்பி வருவதை சுட்டிக்காட்டினார். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதை தவிர வேறு எதுவும் தெரியாது. அடுத்தவர்களின் முயற்சிகளிலானது அவர்கள் தலையிடாமல் இருக்கலாம் என்றார். காங்கிரஸ் சொல்வதை யாரும் நம்ப வேண்டாம். இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ள தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. மக்கள் தங்களுக்கான வாய்ப்பு வரும்போது தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். விரைவில் இந்தியா கொரோனா இல்லாத நாடாக மாறும். நான்கு தலைமுறைகளாக காங்கிரஸ் ஆட்சி செய்தபோதும், ஏழைகளுக்கு இலவச கேஸ், வீடுகள், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட வசதிகளை ஏன் ஏற்படுத்தி கொடுக்கவில்லை? ஏனென்றால் வறுமையை ஒழிப்பதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை என்று அமித்ஷா சாடினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X