Advertisement

அரசு தலையிடாததால் வருத்தமாம்

பொது ஜனவரி 18,2021 | 18:23 IST

Share

இசை அமைப்பாளர் இளையராஜா இதுவரை பெற்ற அரசு விருதுகள் அனைத்தையும் திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளார். இசை கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தினா இந்த தகவலை வெளியிட்டார். பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு தளத்தின் பெரும் பகுதியை இளையராஜா 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தார். பல ஸ்டுடியோக்கள் வணிக வளாகமாக மாறியதை போல பிரசாத் ஸ்டுடியோவும் நஷ்டத்தை தாங்காமல் மூட முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இளையராஜாவை காலி செய்யுமாறு ஸ்டுடியோ நிர்வாகம் சொன்னது. அவர் காலி செய்யாததால், ஸ்டுடியோவுக்குள் அவரை வரவிடாமல் தடுத்தது. இதனால் இளையராஜா வழக்கு போட்டார். இந்த பிரச்னையில் இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோ அவமதித்து விட்டது; மத்திய மாநில அரசுகள் பிராத் ஸ்டுடியோவை கண்டிக்கவோ தண்டிக்கவோ முன்வரவில்லை. அதனால் இளையராஜா தான் பெற்ற அரசு விருதுகளை திரும்ப அனுப்பும் மூடில் இருக்கிறார் என்று தினா சொன்னார். கட்டிட உரிமையாளருக்கும் குடி இருந்தவருக்கும் இடையே நடக்கும் சட்ட பிரச்னையில் அரசு எப்படி தலையிட முடியும் என்பதை தினா விளக்கவில்லை.


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Siva
Siva , இந்தியா. 16-பிப்-2021 | 07:21:31 IST Report Abuse

நல்ல பெயரை கெடுத்து கொள்கிறான்.

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X