பொது ஜனவரி 20,2021 | 11:30 IST
அதிபர் ட்ரம்ப்புக்கு கடைசி நாள். வெள்ளை மாளிகையில் இருந்து இன்று வெளியேறுகிறார். இதையொட்டி, வெள்ளை மாளிகையில் நடந்த வழியனுப்பு விழாவில் அவர் பேசியபோது, அமெரிக்காவை எல்லாவிதத்திலும் வலுவான நாடாக மாற்றிக் காட்ட தான் எடுத்த முயற்சிகளை விவரித்தார். புதிய அரசுக்கு வாழ்த்துக்கள்; அமெரிக்காவை வளமான பாதுகாப்பான நாடாக்க புதிய நிர்வாகம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி வெற்றிபெற பிரார்த்திப்போம் என ட்ரம்ப் கூறினார். பார்லிமென்ட் கட்டடத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சி அடைய வைத்தது; இதை சகித்துக்கொள்ள முடியாது என்றார். கொரோனா வைரஸ் பரவலால் உலகமே நெருக்கடிக்கு ஆளானபோதும் அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை எனவும் சொன்னார்.
வாசகர் கருத்து