அரசியல் ஜனவரி 20,2021 | 11:57 IST
மேற்குவங்கத்தில் பாஜவை வீழ்த்த காங்கிரசுடன் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் இணைய வேண்டும் '' என மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு திரிணமூல் காங்கிரஸ் துணைத்தலைவர் சவுகத் ராய் பதில் அளித்துள்ளார். ''மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மிகவும் சின்ன கட்சி. போன லோக்சபா தேர்தலில் வெறும் இரண்டு இடத்தில் மட்டும் ஜெயித்த கட்சி. அந்த கட்சியுடன் நாங்கள் ஏன் இணைய வேண்டும்?'' என சவுகத் ராய் கேட்டார். பாஜவை எதிர்கொள்ளும் துணிச்சல் திரிணமுல் கட்சிக்கு இருக்கிறது உங்கள் சொந்த பலத்தை வைத்து நீங்கள் பா.ஜவுடன் மோதுங்கள்'' எனவும் காங்கிரசுக்கு பதிலடி கொடுத்தார்.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: