அரசியல் ஜனவரி 20,2021 | 15:29 IST
டிராகன் பழத்தின் பெயரை கமலம் என்று மாற்றி இருக்கிறது குஜராத் அரசு. ”சீன பெயரை இந்திய பெயராக மாற்றினோம். இதில் அரசியல் நோக்கம் இல்லை” என்கிறார் முதல்வர் விஜய் ருபனி. தமிழ், சமஸ்கிருதம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தாமரை மலரின் பெயர் கமலம் என்று குறிப்பிடப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் சின்னம் தாமரை. அக்கட்சியின் குஜராத் மாநில தலைமை அலுவலகத்தின் பெயர் கமலம். தமிழக பா.ஜ.க அலுவலகம்கூட கமலாலயம் என்றுதான் பெயர் சூட்டப்பட்டுள்ளது. “பழம் அசப்பில் தாமரை மொட்டு போல் இருப்பதால் கமலம் என பெயர் வைத்தோம். வேறு காரணம் இல்லை” என்கிறார் முதல்வர். குஜராத்தில் டிராகன் பழம் அதிகமாக பயிரிட படுகிறது.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: