அரசியல் ஜனவரி 20,2021 | 20:50 IST
தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் பதவி விலகுகிறார். டி.ஆர்.எஸ். கட்சியின் நிறுவனரான அவர், தேசிய அரசியலில் இறங்கி பிரதமர் நாற்காலியில் அமர விரும்புகிறார். இப்போது அமைச்சராக இருக்கும் மகன் கே.டி.ராமராவுக்கு முதல்வர் பதவியை கைமாற்றுகிறார். இதற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புதல் வழங்கி விட்டதாக ஒரு அமைச்சர் தெரிவித்தார். மக்கள் ஒப்புதல் தேவை இல்லையா? என கேட்டதற்கு, "குடும்பம் வேறு மக்கள் வேறு என எங்கள் தலைவர் பிரித்து பார்ப்பது இல்லை" என்று ஒரே போடாக போட்டார் அமைச்சர். தெலங்கானா கவர்னர் தமிழிசை அடுத்த மாதம் புது முதல்வருக்கு பதவி பிரமாணம் செய்வார் என்று ஐதராபாத்தில் பேச்சு.
வாசகர் கருத்து (3) வரிசைப்படுத்து:
மேலும் 2 கருத்துக்கள்...