சினிமா வீடியோ ஜனவரி 21,2021 | 07:25 IST
நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடித்து ஜன., 14ல் ஓடிடியில் வெளியான படம் 'பூமி'. சமூக வலைத்தளங்களில் இப்படம் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டது. ரசிகர் ஒருவர், ''இதுவரை நான் பார்த்த படங்களில் 'பூமி' தான் மோசமான படம். லட்சுமணன் உடன் பணிபுரிவதை நிறுத்திக் கொள்ளுங்கள் ஜெயம் ரவி'' என பதிவிட்டார். இதற்கு லட்சுமண், “அடுத்த தலைமுறையினர் நல்லா இருக்கணும்னு இந்த படம் எடுத்தேன். ரோமியோ ஜுலியட் எடுத்த எனக்கு கமர்ஷியல் தெரியாதா, நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும். நீங்க ஜெயிச்சிட்டீங்க, நான் தோத்துட்டேன்,” என பதிலளித்துள்ளார். க்ளைமாக்ஸில் ஆர்ஆர்ஆர் ராஜமவுலி இயக்கத்தில் அடுத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'. ராம் சரண் தேஜா, ஜுனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராம ராஜு, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது. க்ளைமாக்ஸ் படப்பிடிப்பு நடப்பதாக ராஜமவுலி தெரிவித்துள்ளார். எப்படியும் இந்தாண்டுக்குள் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். சிவகார்த்திகேயனை ஆங்கிலத்தில் பேச வைத்த ரகுல் ரவிக்குமார் இயக்கத்தில் 'அயலான்' படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் நடிக்கின்றனர். ''அயலான் படப்பிடிப்பில் எனது பகுதி முடிய மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது. இதில் பணியாற்றியது மகிழ்ச்சி'' என ரகுல் டுவிட்டரில் தெரிவித்தார். இதற்கு, ''உங்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. என்னை ஆங்கிலத்தில் பேச வைத்ததற்கு நன்றி. நான் உங்களுடன் பேசியது பிரிட்டிஷ் இங்கிலீஷ் என்று நினைக்கிறேன்'' என கிண்டலாக பதிலளித்துள்ளார் சிவகார்த்திகேயன். ஹேக்கான நஸ்ரியாவின் இன்ஸ்டா தமிழ், மலையாளத்தில் பிரபலமான நடிகை நஸ்ரியா மீண்டும் படங்களில் நடித்தும், கணவர் பஹத் பாசில் உடன் இணைந்து படங்கள் தயாரித்தும் வருகிறார். சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. ''சில ஜோக்கர்கள் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி உள்ளனர். சில நாட்கள் எனது பேஜில் இருந்து வரும் குறுஞ்செய்திகளுக்கு யாரும் பதிலளிக்காதீர்கள்'' என தெரிவித்துள்ளார் நஸ்ரியா. மணிரத்னம் படத்தில் யோகி பாபு இயக்குனர் மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கி வருவதோடு, 9 குறும்படங்களை கொண்ட 'நவரசா' என்ற ஆந்தாலஜி படத்தையும் தயாரிக்கிறார். கே.வி.ஆனந்த், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்பராஜ், கவுதம் மேனன், ரவீந்திரன் பிரசாத், அரவிந்த்சாமி உள்ளிட்ட 9 பேர் இயக்குகின்றனர். ஒரு குறும்படத்தை பொன்ராம் இயக்குவதாக இருந்தது. அவர் விலகி கொள்ள தற்போது பிரியதர்ஷன் அந்த பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் இயக்கும் பகுதியில் காமெடி நடிகர் யோகிபாபு முதன்மை வேடம் ஏற்றுள்ளார். ஜன., 22ல் ஓடிடியில் குருதி களம் இயக்குனர்கள் ராஜபாண்டி, தனுஷ் இயக்கத்தில் 13 அத்தியாயங்கள் கொண்ட “குருதி களம்” என்ற வெப்சீரிஸ் தயாராகிறது. சந்தோஷ் பிரதாப், அசோக் குமார், சவுந்தர் ராஜா, ஸ்ரீகாந்த், சனம் ஷெட்டி, மாரிமுத்து, வின்செண்ட் அசோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சென்னையில் இரண்டு கும்பல்களை சுற்றி நடக்கிறது இந்த தொடர். அவர்கள் வன்முறையின் மூலம் சென்னையை எப்படி ஆளுகிறார்கள் என்பதே இதன் கரு. எம்எக்ஸ் பிளேயரி-ல் ஜன., 22ல் வெளியாகிறது.
வாசகர் கருத்து