Advertisement

ரூ.66 லட்சத்துடன் கணவரும் கைது

சம்பவம் ஜனவரி 21,2021 | 15:39 IST

Share

சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் சூப்பிரண்டாக இருப்பவர் இர்பான் அகமது. இவர், தனது மனைவி மும்தாஜுடன் சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் சென்றார். பெங்களூருவில் இருந்து லக்னோ செல்லும் விமானத்தில் ஏறச் சென்றனர். அப்போது பணம் நகைகளை கொண்டு வந்திருப்பதாக இர்ஃபான் ஃபோனில் யாரிடமே சொன்னார். அதைக் கேட்ட மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள், அவரை சோதனையிட முயன்றனர். நான் யார் தெரியுமா? கஸ்டம்ஸ் ஆபீஸர் என இர்பான் கெத்து காட்டினார். சிஐஎஸ்எப் அதிகாரிகள் மசியவில்லை. பேக்கை பிடுங்கி சோதனையிட்டபோது, 2,000 ரூபாய் நோட்டுக் கட்டுகள் இருந்தன. மொத்தமாக 66 லட்ச ரூபாய் இருந்தது. உடனே, மும்தாஜ் எனக்கு உடம்பு சரியில்லை; பாத்ரூமுக்கு போகணும் என அதிகாரிகளிடம் கூறினார். பாத்ரூமுக்கு சென்ற மும்தாஜ் அங்கிருந்த குப்பைத் தொட்டியில் 10 லட்ச ரூபாய், 2 ஐபோன்களை போட்டு மறைத்தார். அவர் மீது சந்தேகப்பட்டு பின்னாலேயே சென்ற பெண் அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். மொத்தம் 85 லட்சம் ரூபாய் மற்றும் தங்க நகைகள், 2 லேப்டாப், 2 செல்போன் ஆகியவற்றை சிஐஎஸ்எப் அதிகாரிகள் பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிடம் ஒப்படைத்தனர். இர்பான், மும்தாஜ் இருவரும் கைது செய்யப்பட்டனர்.


வாசகர் கருத்து (5) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

kulandhai Kannan
kulandhai Kannan , . 21-ஜன-2021 | 22:30:33 IST Report Abuse

விமான மார்க்கமாக கடத்துவதில் அமைதி மார்க்கம்தான் டாப். சிலகாலம் இவர்களது விமானப் பயணங்களைத் தடை செய்தால் நல்ல வித்தியாசம் தெரியும்.

Rate this:
Reply

மேலும் 4 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X