பொது ஜனவரி 21,2021 | 20:23 IST
திருமணமான புதிதில் மருமகனுக்கு மாமியார் வீட்டில் வரவேற்பு தடபுடலாக இருக்கும். இது எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனா இந்தளவுக்கு மரியாதையை பார்த்திருக்க மாட்டீங்க... ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தில் பெண் எடுத்த இந்த இளைஞர், தனது புது மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு சங்கராந்தி கொண்டாட வந்தார். தனக்காக மாமியார் 125 வகை உணவு வகைகளை டேபிளில் பரப்பி வைத்திருப்பதை கண்டதும் மருமகன் மிரண்டு போய்விட்டார். ஒவ்வொன்னா சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க மாப்பிள்ளை என மாமியார் சொல்ல, எதை முதலில் சாப்பிடுவது என சிறிது குழம்புகிறார், இந்த அதிர்ஷ்டக்கார மருமகன், பிறகு, ஒவ்வொன்றாக எடுத்து ருசி பார்க்கிறார்.
வாசகர் கருத்து (4) வரிசைப்படுத்து:
மேலும் 3 கருத்துக்கள்...