செய்திச்சுருக்கம் ஜனவரி 22,2021 | 08:00 IST
தமிழக சட்டசபை, பிப்ரவரி 2ம் தேதி கூடுகிறது. சமூக இடைவெளி பின்பற்ற ஏதுவாக, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் கூட்டம் நடைபெறும். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். கூட்டத்தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பதை அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அதை தொடர்ந்து, இடைக்கால நிதிநிலை பட்ஜெட் கூட்டம் நடைபெறும்.
வாசகர் கருத்து