Advertisement

மீண்டும் ராகுலை கெஞ்ச தீர்மானம்?

அரசியல் ஜனவரி 22,2021 | 08:50 IST

Share

கடந்த முறை கமிட்டி கூடிய போது,, கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்திக்கு மூத்த தலைவர்கள் 23 பேர் ''துடிப்பான முழு நேர தலைவரை நியமிக்க வேண்டும்'' என கடிதம் எழுதி இருந்தனர், கமிட்டி கூடும் நேரத்தில் கசிய விடப்பட்ட அந்த கடிதம் மீது காரசார விவாதம் நடைபெற்றது. கொஞ்ச நாளில் கடிதம் எழுதிய தலைவர்கள் சிலரை சோனியா அழைத்து பேசினார். ஆனால் கடிதம் மீது உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில், இன்று நடக்கும் கூட்டம் முக்கியமானது என கருதப்படுகிறது. நிரந்தர தலைவரை தேர்வு செய்வது குறித்து கூட்டம் சீரியசாக விவாதிக்கும் என கடிதம் எழுதிய 23 தலைவர்களும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், எந்த தலைவருக்கும் ஒருமனதான ஆதரவு இல்லை என்பதால், விருப்பமே இல்லாத ராகுலையே மீண்டும் தலைவர் பதவி ஏற்க கமிட்டி அழைப்பு விடுக்கும் என்று தெரிகிறது. தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்தும் காரிய கமிட்டியில் விவாதிக்கப்படும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X