பொது ஜனவரி 22,2021 | 12:25 IST
சென்னையில் இன்று காலை திடீரென பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் மெதுவாக சென்றன. சென்னையிலிருந்து மும்பை, அகமதபாத், புனே, மதுரை உட்பட 16 விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டன. அதே நேரத்தில் டில்லியிலிருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்கள், கொல்காத்தாவிலிருந்து வந்த விமானம் துபாயிலிருந்து வந்த விமானம் ஆகியவை பெங்களுர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
வாசகர் கருத்து