Advertisement

டாக்டர் ஹண்டே உருக்கமான கோரிக்கை

பொது ஜனவரி 23,2021 | 11:25 IST

Share

”தடுப்பூசி குறித்து பொதுமக்கள் பயமோ தயக்கமோ அடைய தேவை இல்லை. அவசியம் போட்டு கொள்ளுங்கள். அது நமது கடமை” என்கிறார் டாக்டர் ஹண்டே. எம்ஜிஆர் அரசில் சுகாதார அமைச்சராக இருந்த ஹண்டே 100 வயதை நெருங்குகிறார். அவர் சொல்வதை கேளுங்கள்: அருமையான கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன். எனக்கு 94 வயது ஆகிறது. எனக்காக மட்டும் தடுப்பூசி போடவில்லை. என் வழியாக மற்றவர்களுக்கு பரவ இடம் அளிக்க கூடாது என்கிற சமூக கடமையும் இருப்பதால் போட்டு கொண்டேன். அனைவரும் தடுப்பூசி போட்டால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும். அது வெறும் அரை மில்லி மருந்து. ஊசி போடும்போது ஒரு வலியும் இல்லை. எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை. ஊசி போட்ட பிறகு என் வழக்கமானசெயல்பாடு எதையும் மாற்றிக் கொள்ள நேரவில்லை. ஒரு டாக்டர் என்பதால் தடுப்பூசியின் முக்கியத்துவம் எனக்கு நன்றாக தெரியும். சுகாதார அமைச்சராகவும் இருந்தேன். அம்மை நோயை, போலியோவை ஒழிக்க நடத்திய தடுப்பூசி இயக்கங்களில் பங்கெடுத்து இருக்கிறேன். அதனால் சொல்கிறேன், இதை கடமையாக எடுத்து கொள்ளுங்கள். பிரதமர் நரேந்திர மோடி, சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் நமது விஞ்ஞானிகளின் ஆலோசனை கேட்டு செயல்படுகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் அடங்கிய குழு நாட்டிலேயே சிறப்பான குழுவாக செயல்படுகிறது. ஆகவே, தமிழக மக்கள் அனைவரும் தயங்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கும் பாதுகாப்பு. நாட்டுக்கும் நல்லது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X