பொது ஜனவரி 23,2021 | 19:23 IST
சென்னை, பட்டினப்பாக்கம், டூமீங்குப்பத்தை சேர்ந்தவர் ரோஜா. 36 வயதாகும் இவர் இதுவரை 5600 ஆதரவற்ற உடல்களை தனது சொந்த செலவில் நல்லடக்கம் செய்துள்ளார். சுடுகாட்டில் சரியாக புதைக்கப்படதா ஆதரவற்ற உடலை நாய்கள் சில கடித்து உண்ணும் காட்சியை தனது 15வது வயதில் பார்த்துள்ளது. ஆதரவற்றோர் மரணத்திற்கு பின்பும் கவுரவமாக மதிக்கப்படுவதில்லை என்ற எண்ணம் ஆழ்மனதில் பதிந்துள்ளது. வளர்ந்து, வேலைக்கு சேர்ந்து, தனது சொந்த பணத்தில் உடல்களை தேடி அடக்கம் செய்துவருகிறார். சென்னையில் எங்கு ஆதரவற்றோர் மரணமடைந்தாலும் முதலில் போலீசார் அழைப்பது ரோஜாவையே. சாதி, மதம், பெயர் என தகவல் தெரியாவிட்டாலும், அனைவரையும் உறவினர்களாக கருதி, இறுதிச் சடங்குகள் செய்துவருகிறார்.
வாசகர் கருத்து