அரசியல் ஜனவரி 23,2021 | 20:22 IST
டில்லி மால்வியா நகர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பார்தி. தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் மேலிட பொறுப்பாளரும்கூட. 2016-ல் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒரு பக்க சுற்றுச்சுவரை 300 பேருடன் சென்று இடித்ததாகவும், தடுக்கவந்த பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாகவும் டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மக்கள் பயன்படுத்தும் பாதையை எய்ம்ஸ் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டியதாக சோம்நாத் பார்தி தன் செயலுக்கு நியாயம் கற்பித்தார். வழக்கை விசாரித்த டில்லி கோர்ட், சோம்நாத் பார்திக்கு 2 ஆண்டு சிறை, ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தது. தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்யும் வகையில் ஜாமினும் வழங்கி நீதிபதி ரவிந்திர குமார் பாண்டே உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து