பொது ஜனவரி 24,2021 | 09:00 IST
வாக்காளர்களுக்கு மின்னணு அடையாள அட்டை வழங்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தேசிய வாக்காளர் தினமான நாளை, அறிமுகம் செய்யப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, புதிதாக விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு இது கிடைக்கும். அவர்கள், மொபைல் போன் எண்ணுடன் விண்ணப்பித்திருக்க வேண்டும். மின்னணு வாக்காளர் அட்டையை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புகைப்படம், வரிசை எண் உள்ளிட்ட பல விபரங்களுடன் 'க்யூ ஆர் கோடு வசதியும் இருக்கும். பழைய வாக்காளர்களுக்கு பிப்ரவரி 1 முதல் மின்னணு அடையாள அட்டை கிடைக்கும். வழக்கமான, வாக்காளர் அடையாள அட்டை வினியோகமும் தொடரும்.
வாசகர் கருத்து