செய்திச்சுருக்கம் ஜனவரி 26,2021 | 13:00 IST
72 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். குஜராத் ஜாம்நகர் அரச குடும்பத்தினர் பரிசளித்த தலைப்பாகையை பிரதமர் அணிந்து வந்தார் . அணிவகுப்பை பார்வையிட ராஜபாதை சென்றார் . முப்படை தளபதிகள் வரவேற்றனர். குதிரைப்படை வீரர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை வரவேற்றனர். தேசிய கொடி ஏற்றி வைத்து சல்யூட் அடித்தார். 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது . முப்படைகளின் அணிவகுப்பு நடந்தது. வங்கதேசம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாடும் வகையில் , இரு நாட்டு உறவை வலுபெற செய்ய இந்திய வீரர்களுடன் அந்நாட்டு வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர் . ரபேல் விமான சாகசங்கள் நடைபெற்றது.
வாசகர் கருத்து