Advertisement

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

பொது ஜனவரி 26,2021 | 16:27 IST

Share

இந்தியாவில் தயாரான கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு போடும் பணி 10 நாளாக நடந்து வருகிறது. 2 தடுப்பூசிகளின் நம்பகத்தன்மை குறித்தும், நோய் எதிர்ப்பு சக்தியை உண்டுபண்ணும் திறன் குறித்தும் வதந்திகள் பரப்பப்படுவதால் மருத்துவப் பணியாளர்களே தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில் முதல் ஒரு வாரத்தில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் 44 சதவீதம் பேர்தான் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். நாடு முழுக்க இதே நிலைதான் உள்ளது. இதை கருத்தில் கொண்டு, வதந்தி கிளப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமைச்செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா கடிதம் அனுப்பியுள்ளார். சமூக வலைதளங்கள் மற்றும் இதர மீடியாக்களில் உள்நோக்கத்துடன் சிலர் பரப்பிவிடும் வதந்திகளால் தடுப்பூசிகள் மீது மக்களுக்கு தேவையில்லாத சந்தேகங்கள் ஏற்படுகிறது. மக்களிடையே பீதி கிளப்புவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானது, செயல்திறன் மிக்கது என மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு உறுதி செய்திருக்கிறது. இந்த உண்மையை மக்களுக்கு உடனே விளக்கிச் சொல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி பற்றி வதந்திகளை கிளப்பிவிடும் தனி நபர்கள், அமைப்புகள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா உத்தரவிட்டுள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X