பொது ஜனவரி 26,2021 | 18:25 IST
சென்னை, மேற்கு மாம்பலத்தில் ரூபி ராயல் ஜூவல்லர்ஸ் அண்ட் பேங்கர்ஸ் என்ற நிறுவனம் 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. முஸ்லீம்களுக்கு மட்டும் வட்டியில்லா நகைக்கடன் வழங்குவதாக அறிவித்தனர். அதை நம்பி ஆயிரக்கணக்கானோர், நகைகளை அடமானம் வைத்தனர். வாடிக்கையாளர்களிடம் இருந்து 500 கிலோ தங்க நகைகள் பெறப்பட்டன. அவற்றை வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களில் மறு அடகு வைத்த ஜூவல்லரி நிறுவனத்தினர், அந்த பணத்துடன் எஸ்கேப் ஆகிவிட்டனர். நகைகளை பறிகொடுத்து அப்பாவிமக்கள் பரிதவித்தனர். தலைமறைவான ஜூவல்லர்ஸ் நிர்வாகிகள் சையது ரகுமான், அனிசூர் ரகுமான் மற்றும் ஊழியர்கள் ரிகானா, சஜிதா, ஷஹீனா ஆகிய ஐந்து பேரை தனிப்படை போலீசார் தெலங்கானாவில் கைது செய்தனர். அடகு பெறப்பட்ட நகைகள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து