பொது ஜனவரி 28,2021 | 10:25 IST
விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. ஒரு விவசாயி இறந்தார். 400 போலீசார் காயமுற்றனர். வன்முறையை தூண்டியதாக பஞ்சாபி நடிகர் தீப் சிந்து மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் மீது 25 வழக்குகளை டில்லி போலீசார் பதிவு செய்துள்ளனர். 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 200 பேரிடம் விசாரணை நடக்கிறது. செங்கோட்டையில் தேசியக்கொடிக்கு நடந்த அவமதிப்பை அரசு பொறுத்துக்கொள்ளாது; வன்முறையை தூண்டி விட்டவர்களை சும்மா விடாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவதேகர் கூறினார். விவசாயிகள் போராட்டத்தை ராகுல் தூண்டி விட்டார்; சிஏஏ போராட்டத்தின்போதும் இதைத்தான் அவர் செய்தார் எனவும் ஜாவதேகர் குற்றம்சாட்டினார்.
வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து: