பொது ஜனவரி 28,2021 | 12:13 IST
கடலுார் வடலுாரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 150வது தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு காலை, 6:00 மணிக்கு ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 10:00, மதியம், 1:00, இரவு, 7:00, 10:00 மற்றும் நாளை அதிகாலை, 5:30 மணிக்கும், ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக, அரசின் வழிகாட்டுதலோடு விழா நடக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு வடலூரில் மதுபான மற்றும் மற்றும் இறைச்சி கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது
வாசகர் கருத்து