Advertisement

பக்தர்கள் காவடி தூக்கி வந்து நேர்த்திகடன்

பொது ஜனவரி 28,2021 | 13:53 IST

Share

முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது. அறுபடை வீடுகளில் முதன்மையான பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் காலை முதலே பாத யாத்திரையாக வந்தனர். காவடி தூக்கியும் அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். வடபழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜை மற்றும் தீபாரதனை நடத்தப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அங்கப்பிரதட்சணம் செய்தும் வேண்டுதல்களை நிறைவேற்றினர். திருத்தணி கோவிலில் தமிழகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். முருகன் பக்தி பாடல்கள் பாடியபடி கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். புதுச்சேரி சீர் செல்வ முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தீமிதி திருவிழா நடந்தது. முருகன் கோவில்களில் தைப்பூசத்தன்று இங்கு மட்டும்தான் தீமிதி நிகழ்வு நடத்தப்படுகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X