Advertisement

வன்முறையை தூண்டும் முதல் தலைவர்

அரசியல் ஜனவரி 30,2021 | 10:00 IST

Share

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டத்தை விவசாயிகள் கைவிடக்கூடாது; இந்தப் போராட்டத்தில்தான் உங்கள் எதிர்காலம் இருக்கிறது; ஒரு அங்குலம் கூட பின்வாங்கி விடாதீர்கள் என விவசாயிகளுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வேண்டுகோள் விடுத்தார். சட்டங்களை பிரதமர் திரும்பப் பெறாவிட்டால் டில்லியைப் போல மற்ற நகரங்களுக்கும் போராட்டம் பரவும் எனவும் அவர் எச்சரித்தார். ராகுலின் கருத்துக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டனம் தெரிவித்தார். வேளாண் சட்ட பிரச்னையில் தனது நிலைப்பாட்டை பிரதமர் ஏற்காவிட்டால் நகரங்கள் தீப்பற்றி எரியும் என ராகுல் சொல்கிறார். இதன்மூலம், விவசாயிகள் போராட்டத்தை பயன்படுத்தி நாட்டுக்கு எதிராக போர் பிரகடனம் செய்கிறார். அமைதியை ஏற்படுத்த முயற்சிக்காமல் வன்முறையை தூண்டும் முதல் இந்திய அரசியல் தலைவர் ராகுல்தான் என ஸ்மிருதி குற்றம்சாட்டினார். வன்முறை அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள்; நாட்டில் அமைதி தவழ செய்வார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X