Advertisement

எதற்காக மறைத்தார்? அதிர்ச்சி தகவல் அம்பலம்

பொது ஜனவரி 31,2021 | 11:24 IST

Share

ஜப்பானின் டோக்கியோ நகரில் அரசுக்கு சொந்த குடியிருப்பில், யூமி யோஷினோ என்ற பெண் தாயுடன் வசித்து வந்தார். இவர் முறையாக வாடகை செலுத்தாததால், சில தினங்களுக்கு முன்பு குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார். யூமி தங்கியிருந்த வீட்டை, துப்புரவு பணியாளர்கள் சுத்தப்படுத்தினர். அப்போது அங்கு ஒரு 'பிரீஸர் பாக்ஸ்' இருந்தது. திறந்து பார்த்தபோது, அதில் உருக்குலைந்த நிலையில் ஒருவரின் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த சடலம், யூமி யோஷினோவின் தாய் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பே அவர் இறந்து விட்டார். வீட்டுக்கான குத்தகை ஒப்பந்தத்தில், தாய் தான் கையெழுத்து போட்டிருந்தார். அவர் இறந்தது தெரிந்தால், வீட்டை காலி செய்ய வைத்துவிடுவார்கள் என்பதற்காக, தாயின் உடலை மறைத்து வைத்துள்ளார். யூமி யோஷினோவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X