Advertisement

மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்

பொது ஜனவரி 31,2021 | 11:53 IST

Share

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களை கட்டத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தமிழகத்தில் சமீபத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா தேசிய தலைவர் நட்டா, மதுரைக்கு வந்து அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்து விட்டுச் சென்றார். அடுத்ததாக, பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். ஜனவரி 19ம்தேதி டில்லியில் பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி சந்தித்தபோது தமிழகத்துக்கு வருகை தர வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை பிரதமர் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதன்படி, பிப்ரவரி 14ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். வண்ணாரப்பேட்டை விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X