Advertisement

தளர்வுகள் அறிவித்தது தமிழக அரசு

பொது ஜனவரி 31,2021 | 13:40 IST

Share

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, பிப்ரவரி இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான அனைத்து வகுப்புகளும் வரும் 8 ம் தேதி தொடங்கப்படுகிறது. விடுதிகளும் திறக்கலாம். அதே நாளில், 9 மற்றும் 11ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கும். பெட்ரோல் பங்குகள் இனி, நேரக்கட்டுப்பாடு இல்லாமல் வழக்கம்போல் செயல்படலாம். நீச்சல் குளங்கள் செயல்படலாம். கண்காட்சிகள் நடத்தலாம். சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வு, மதம் சார்ந்த உள் அரங்கு கூட்டங்களில் அதிகபட்சமாக 600 பேர் வரை பங்கேற்கலாம். அனைத்து மாவட்டங்களிலும், மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம். ராமேஸ்வரத்தில் தீர்த்தமாடுதல் நிகழ்ச்சிக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X