Advertisement

11.43 லட்சம் விவசாயிகளுக்கு கிடைக்கும்

பொது பிப்ரவரி 01,2021 | 12:25 IST

Share

தமிழகத்தில், ஜனவரி மாதம் இயல்பான அளவை விட, 1,108 சதவீதம் கூடுதலாக மழை கொட்டியது. இதனால், 6.81 லட்சம் ஹெக்டேருக்கு மேல் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்தன. 11.43 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, 1,116 கோடி ரூபாய்க்கு இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மானாவரி மற்றும் நீர்பாசன வசதி பெற்ற நெல் மற்றும் இதர பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். மானாவாரி நெற்பயிர் தவிர, அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் ஹெக்டேருக்கு 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். பல்லாண்டு கால பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 25 ஆயிரம் ரூபாய் தரப்படும். நிவாரண தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X