Advertisement

மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு | Budget 2021 - 22

பொது பிப்ரவரி 01,2021 | 16:09 IST

Share

சென்னை 2ம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு 63,000 கோடி மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு சென்னையில் இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி 14ம்தேதி சென்னை வண்ணாரப்பேட்டை விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிவுக்கு வருகிறது. சென்னையில் 2வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் 119 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ 2ம் கட்ட பணிகளுக்காக மத்திய பட்ஜெட்டில் 63,246 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். பைட் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் மெட்ரோ 2வது கட்ட பணிகளின்போது மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையில் ஒரு வழித்தடமும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் 2வது வழித்தடமும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையில் 3வது வழித்தடமும் அமைக்கப்படவுள்ளன. மூன்று தடங்களையும் சேர்த்து 119 கிமீ நீளத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமையவுள்ளன. இதில், 52 கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகளை இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கி, 2024 25ம் ஆண்டுக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X