Advertisement

பட்ஜெட் பற்றி மோடி பெருமிதம்

பொது பிப்ரவரி 01,2021 | 18:53 IST

Share

கொரோனா பரவல், பொருளாதாரத்தில் பின்னடைவு போன்ற கடினமான சூழல்களுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட், நாட்டு மக்களின் தன்னம்பிக்கையை கூட்டும்விதமாக உள்ளது என பிரதமர் மோடி கூறினார். கிராமங்கள் மற்றும் விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயத்துறை வலுப்பெறும். விவசாயிகளின் வருவாய் உயரும்; சிறுகுறு தொழில் துறை முன்னேற்றம் காணும் என மோடி தெரிவித்தார். சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் தொலைநோக்கு சிந்தனையுடன் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நாட்டின் அனைத்து பகுதிகளும் முன்னேற்றமடைய வேண்டுமென்பதுதான் இந்த பட்ஜெட்டின் நோக்கம். அதனால்தான் கட்டமைப்புத் திட்டங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு வளர்ச்சி பெறும்; மக்களின் வாழ்க்கைத்தரமும் உயரும் என மோடி கூறினார். மக்கள் தலையில் நிறைய வரிச்சுமையை சுமத்தப்போகிறோம் என பலரும் நினைத்தார்கள்; ஆனால், எந்த ஒளிவு மறைவும் இல்லாத வெளிப்படையான பட்ஜெட்டை வழங்கியுள்ளோம்; மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் செயல்திறன்மிக்க பட்ஜெட் இது எனவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X