Advertisement

அரை மணி நேரத்தில் சென்றடைந்த இதயம்

சம்பவம் பிப்ரவரி 02,2021 | 20:53 IST

Share

தெலங்கானா வாராங்கலை சேர்ந்த விவசாயி நரசிம்மா ரெட்டி விபத்து ஒன்றில் காயமடைந்தார். ஹைதராபாத் எல்.பி நகரில் உள்ள காமினேனி மருத்துமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மூளைச்சாவு அடைந்த அவருடைய உடல் உறுப்புகளை குடுபத்தினர் தானம் செய்ய முன் வந்தனர். நரசிம்மா ரெட்டியின் இதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட எட்டு உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. அவருடைய இதயம், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. காமிநேனி மருத்துவமனையிலிருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு சாலை வழியாக செல்ல வேண்டும் என்றால் குறைந்தது இரண்டு மணி நேரமாகும். இதனால் இதயத்தை மெட்ரோ ரயிலில் கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர். மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் எல்.பி. நகர் மெட்ரோ ஸ்டேசனுக்கு, 5 நிமிடத்தில் இதயம் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து மெட்ரோ ரயிலில் நான் ஸ்டாப்பாக அரை மணி நேரத்தில் ஜூப்ளி ஹில்ஸ் ஸ்டேசனுக்கு சென்றது. பின்னர் அப்போலோவுக்கு இதயம் கொண்டு செல்லப்பட்டு ஆப்ரேஷன் தொடங்கப்பட்டது. குறீப்பிட்ட நேரத்தில் மெட்ரோ மூலம் இதயம் கொண்டு செல்லப்பட்டதற்கு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு க்ஷ தெரிவித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X