Advertisement

முதல் முயற்சியிலேயே கிடைத்த வெற்றி

பொது பிப்ரவரி 02,2021 | 21:55 IST

Share

அகில இந்திய அளவில், சி.ஏ. எனப்படும் சார்ட்டட் அக்கவுன்டன்ட் தேர்வு, கடந்தாண்டு நவம்பரில் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் வெளியாகின. இதில், சேலம், கன்னங்குறிச்சியை சேர்ந்த மாணவர், இசக்கி ராஜ், 800க்கு 553 மார்க் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றார். பிளஸ் 2 முடித்து சி ஏ படிக்க தொடங்கிய இசக்கி ராஜ், முதல் முயற்சியிலேயே முதலிடம் பிடித்துள்ளார். ஊரடங்கு காலத்தை சிஏ படிப்புக்கு தயாராவதற்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறினார். நல்ல மார்க் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், தேசிய அளவிலேயே முதலிடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றார் வியப்புடன்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X