Advertisement

மனிதநேயத்திற்கு காவல்துறை பாராட்டு

சம்பவம் பிப்ரவரி 03,2021 | 09:00 IST

Share

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டம், அடிவிகொதுரு adivikothuru கிராமத்தில் உள்ள அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தார். காசிபுக்கா Kasibugga காவல் நிலைய பெண் எஸ்ஐ சிரிஷா வந்து விசாரணை நடத்தினார். இறந்தவரின் சடலத்தை மீட்டு இறுதிச்சடங்கு செய்ய நடவடிக்கை எடுத்தார். ஆனால், சடலத்தை தூக்கிக்கொண்டுவர அங்கிருந்தவர்கள் யாரும் முன்வரவில்லை. சுற்றிலும் வயல்வெளி என்பதால், வாகனங்கள் வரவும் வழியில்லை. இதனால் எஸ்ஐ சிரிஷா, ஒருவரின் உதவியுடன், தாமே சடலத்தை தூக்கிக்கொண்டு நடக்க தொடங்கினார். சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சுடுகாட்டிற்கு சடலத்தை தோளில் சுமந்தபடி கொண்டு சென்று, தன்னார்வலர்கள் உதவியுடன் இறுதிசடங்கு செய்து அடக்கம் செய்ய உதவினார். பெண் எஸ்.ஐ-ன் மனிதநேய செயலை ஆந்திரா டிஜிபி கவுதம் சவாங் உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.


வாசகர் கருத்து (7) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

N Annamalai
N Annamalai , இந்தியா. 11-பிப்-2021 | 17:25:38 IST Report Abuse

அட்டகாசம் .வித்யாசம் .வாழ்த்துக்கள் .நன்றிகள் .சீரிய செயல் .வெள்ளத்தனைய மலர் நீட்டம் போல் உள்ளது உங்கள் செயல் .

Rate this:
Reply

மேலும் 6 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X