அரசியல் பிப்ரவரி 06,2021 | 08:30 IST
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ஆளுங்கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் அவசர செயற்குழு நாளை கூடுகிறது இந்த கூட்டத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமராவ், புதிய முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், அனைத்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள்,மாநகராட்சி மற்றும் நகராட்சி தலைவர்கள் உள்ளிட்டோருக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கட்சியின் செயல்தலைவராகவும், மாநில அமைச்சராகவும் உள்ள கே.டி.ராமராவை, முதல்வர் பதவியில் நியமிக்க வேண்டும் அண்மைக்காலமாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பகிரங்கமாக குரல் கொடுத்து வருகிறார்கள்
வாசகர் கருத்து