அரசியல் பிப்ரவரி 07,2021 | 09:23 IST
ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை அமைச்சர் ராமச்சந்திர ரெட்டி,வீட்டை விட்டு வெளியேற வர தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த மாநில பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ராமச்சந்திர ரெட்டி, 'மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை தேர்தல் அதிகாரிகள் பின்பற்ற வேண்டாம்' என கூறியதாக தெரிகிறது. இதனால் மாநில தேர்தல் ஆணையம் அதிருப்தி அடைந்துள்ளது. '' 21 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடியும் வரை அமைச்சர் ராமச்சந்திர ரெட்டியை வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்க கூடாது '' என போலீஸ் டி.ஜி.பி.க்கு ஆந்திர மாநில தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
வாசகர் கருத்து