Advertisement

தொகுதி உடன்பாட்டில் இழுபறி

அரசியல் பிப்ரவரி 08,2021 | 18:14 IST

Share

அசாம் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட சிறு கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரஸ், 'மெகா'' கூட்டணியை உருவாக்கியுள்ளது. அதில் ஒரு கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்த சில தொகுதிகளுக்கு சென்று, தனியாக பொதுக்கூட்டம் நடத்தி '' இங்கே நாங்கள் தான் நிற்க போகிறோம்'' என பிரச்சாரம் செய்து வருகிறது. ஜனநாயக முன்னணி பிரச்சாரம் செய்த டால்கோன் தொகுதி, காங்கிரசின் கோட்டை. காங்கிரஸ் 'சிட்டிங்' எம்.எல்.ஏ. இலியாஸ் அலி, 2006 ஆம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் வெற்றி பெற்று வருகிறார். 'டால்கோன், காங்கிரஸ் தொகுதி என்பது தெரியும்.ஆனால் எங்கள் வேட்பாளரை இங்கு நிறுத்த முடிவு செய்துள்ளோம். காங்கிரசுடன் உடன்பாடு ஏற்படாவிடாவிட்டால், இருவருமே போட்டியிடுவோம். நட்பு ரீதியிலான போட்டி. ஆனால் நாங்கள் தான் ஜெயிப்போம்'' என சொல்கிறார்,ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் அஜ்மல். ''இது என்ன கூட்டணி தர்மம்? ஜனநாயக முன்னணியும் இங்கு நின்றால், சிறுபான்மையினர் ஓட்டுகள் பிரியும். பா.ஜ.க. எளிதாக வெல்லும்'' என காங்கிரசார் புலம்புகிறார்கள்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X