Advertisement

இந்து வெறுப்பை அப்பட்டமாக வெளிகாட்டுகிறார் | Kanimozhi | Murugan Vel | Madurai

அரசியல் பிப்ரவரி 09,2021 | 10:23 IST

Share

பிரச்சாரத்திற்காக மதுரை சென்ற கனிமொழி, சிம்மக்கல் பகுதியில், கருணாநிதி சிலை அமைக்கும் பணியை பார்வையிட சென்றார். அப்போது திமுக நிர்வாகிகள் இருவர் கனிமொழிக்கு, வெண்கல வேல் கொடுக்க முயன்றனர். அதை பார்த்து டென்ஷன் ஆன கனிமொழி, முகத்தை சுளித்துகொண்டு அதை வாங்க மறுத்துவிட்டார். ஆனால், அந்த வேல் கோயிலுக்காக செய்தது. அதை கனிமொழிக்கு கொடுக்க முன்வரவில்லை என்று கூறி திமுக நிர்வாகிகள் மழுப்பிவிட்டனர். இதற்கு முன்பு, சிவகங்கை, மானாமதுரைக்கு பிரச்சாரத்திற்கு கனிமொழி சென்றிருந்தார். அவருக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களது கலைபொருட்களை பரிசளித்தனர். அவற்றை பெற்றுக்கொண்ட கனிமொழி, ஒரு பெண் கொடுத்த விநாயகர் சிலையை மட்டும் கையால் வாங்க மறுத்துவிட்டார். நாங்கள் இந்துக்களுக்கு விரோதி அல்ல என்று வேல் ஏந்தி கூவி வருகிறார் ஸ்டாலின். ஆனால், பொதுவெளியில் இந்துமத வெறுப்பை அப்பட்டமாக வெளிகாட்டி வருகிறார் கனிமொழி.


வாசகர் கருத்து (10) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

mukambikeswaran sukumar
mukambikeswaran sukumar , இந்தியா. 10-பிப்-2021 | 22:40:40 IST Report Abuse

சனி முழியா இருக்கே.

Rate this:
Reply

மேலும் 9 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X