Advertisement

நோயாளிகள் டிஸ்சார்ஜ் ஆனதால் குதூகலம்

சம்பவம் பிப்ரவரி 11,2021 | 20:23 IST

Share

ராஜஸ்தான் மாநிலம் ஆள்வார் நகரில் ராஜிவ் அரசு மருத்துவமனை உள்ளது. கொரோனா வேகமாக பரவியதை அடுத்து, இங்குள்ள ஐ.சி.யு. வார்டு, கொரோனா வார்டாக மாற்றப்பட்டது. கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிந்த இந்த வார்டில் இப்போது ஒருவர்கூட இல்லை. எல்லாரும் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், குதூகலமான 2 டாக்டர்கள் இந்திப் பாடலை சத்தமாக போட்டு விட்டு, டான்ஸ் ஆடினர். அவர்களுடன் சேர்ந்து துப்புரவு பணியாளர் ஒருவரும் குத்தாட்டம் போட்டார். செல்போனில் அவர்களே வீடியோ எடுத்துள்ளனர். வாய்ஸ் அப் வீடியோவை நண்பர்களிடம் காட்டி பெருமையும் பீற்றிக் கொண்டனர். யாரோ வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பி விட்டு, மூவரின் வேலைக்கும் வேட்டு வைத்துள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X