Advertisement

உதவியாளர், புரோக்கரும் பிடிபட்டனர்

சம்பவம் பிப்ரவரி 12,2021 | 14:00 IST

Share

சென்னை முகப்பேரைச் சேர்ந்த மயில்வேலன் 7ம் தேதி பத்திரப்பதிவு செய்ய திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றார். பத்திரத்தை பதிவுசெய்ய இணை சார்பதிவாளர் 15 ஆயிரம் கேட்டதாகவும், அவரது உதவியாளர் ஆயிரம் ரூபாய் கேட்டதாகவும் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீஸ் அறிவுறுத்தலின்பேரில் ரசாயனம் தடவிய 15,000 ரூபாயை இணை சார்பதிவாளர் செல்வ சுந்தரியிடம் மயில்வேலன் கொடுத்தார். அவர் பணத்தை வாங்காமல் அருகில் இருந்த புரோக்கர் நவீன்குமாரிடம் கொடுக்க சொன்னார். அலுவலக உதவியாளர் விமல்சன் பிரபுக்கு 1,000 ரூபாய் கொடுத்தபோது, அவரும் வாங்காமல் புரோக்கர் செல்வத்திடம் கொடுக்கும்படி கூறினார். நவீன்குமார், செல்வத்திடம் மயில்வேலன் பணம் கொடுத்தபோது மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். செல்வம் அன்று வசூலான லட்சக்கணக்கான பணத்தை நைசாக பையில் போட்டுக்கொண்டு, அங்கிருந்து தப்பிச்செல்ல, நவீன்குமார் மட்டும் பிடிபட்டார். இணை சார்பதிவாளர் செல்வசுந்தரி, அவரது உதவியாளர் விமல்சன் பிரபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.


வாசகர் கருத்து (6) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Mani . V
Mani . V , சிங்கப்பூர். 13-பிப்-2021 | 05:27:31 IST Report Abuse

இந்த புல்லுருவிகளை நடுத்தெருவில் நிற்க வைத்து சுட்டுத் தள்ள வேண்டும்.

Rate this:
Reply

மேலும் 5 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X