Advertisement

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததால் தொடரும் அவலம்

சம்பவம் பிப்ரவரி 14,2021 | 16:15 IST

Share

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் பகுதியில் வெங்கடேஸ்வரா கேட்டரிங் சர்வீஸ் இயங்கி வருகிறது . அங்குள்ள செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்யும் பணியில் மூன்று ஊழியர்கள் ஈடுபட்டனர் . எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி இறந்தனர் . 40 வயதை கடந்த முருகன், பாக்கியராஜ் , ஆறுமுகம் உடல்களை மீட்ட தீயணைப்பு துறையினர் பிரதே பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில்லை . அதனால் தான் இது போன்ற இறப்புகள் ஏற்படுகிறது என் பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் . ஆனால் அலட்சியம் தொடர்கிறது . ஊழியர்களுக்கு பதில் மிஷின்கள் பயன்படுத்தி துப்புறவு பணிகளை மேற்கொள்ளும் வசதிகள் இன்னும் விரிவடையவில்லை. ஸ்ரீபெரும்புதூரில் 2019ல் விஷவாயு தாக்கி 6 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X