Advertisement

துரைமுருகன் பகிரங்க அறிவிப்பு

அரசியல் பிப்ரவரி 16,2021 | 06:22 IST

Share

காட்பாடி தொகுதியில், ஏழாவது முறையாக, எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன். 83 வயதானலும், எட்டாவது முறை ஜெயிக்க விரும்புகிறார். இம்முறை எப்படியும் அவரை வீழ்த்திவிட வேண்டும் என அ.தி.மு.க., நினைக்கிறது. இது, அவருக்கும் தெரியும். அதனால், தினம் தவறாமல் தொகுதியில் வலம் வருகிறார். 'மக்கள் சபை, அ.தி.மு.க.,வை நிராகரிக்கிறோம்' போன்ற கூட்டங்களை நடத்துகிறார். ஒவ்வொரு கூட்டத்திலும், 'என் கடைசி ஆசை, இந்த தொகுதிக்கு மல்டி ஸ்பெஷலிட்டி மருத்துவமனை கொண்டு வரவேண்டும் என்பதுதான். அது நிறைவேற உதவுங்கள். எனக்காக இரண்டு நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள்' என்று கண் கலங்க, நா தழுதழுக்க உருகுகிறார் துரை.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X