Advertisement

நாகரிகம் தெரியாத மாவட்ட செயலாளர்

சம்பவம் பிப்ரவரி 16,2021 | 18:25 IST

Share

சமீபத்தில் திருப்பூருக்கு வந்திருந்தார் கனிமொழி. பிசியான குமரன் ரோட்டில் நடந்து சென்று, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். ஒரு துணிக்கடை முன் கனிமொழி சென்றபோது, அவரை தொண்டர்கள் சூழ்ந்தனர். இதை பார்த்து டென்ஷன் ஆனார் மத்திய மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ். தகாத வார்த்தையால் திட்டி அவர்களை விரட்டினார். கனிமொழி அருகில் இருந்ததை பொருட்படுத்தாமல், அவர் திட்டியது அங்கிருந்த பெண்களை முகம் சுளிக்க வைத்தது. ஆனால், கனிமொழி எதையும் கண்டுகொள்ளவில்லை. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், தொண்டர்களை தவறாக ஏதும் பேசவே இல்லை என்று சமாளிக்கிறார் செல்வராஜ்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Mani . V
Mani . V , சிங்கப்பூர். 17-பிப்-2021 | 08:40:28 IST Report Abuse

எது மரியாதையா? அதுவும் திமுக விடமா? சான்ஸே இல்லை. செல்வி. ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது அவரை கேவலமாக விமர்சித்தவர்தான் இவர்களின் முன்னாள் தலைவர். அப்படி இருக்கையில் இவர்களிடம் நல்ல பண்பை எதிர்பார்க்கலாமா?

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X