Advertisement

அமைச்சர்களை எதிர்த்து போட்டியிட வேண்டுமாம்

அரசியல் பிப்ரவரி 17,2021 | 10:23 IST

Share

கருணாநிதியும், ஜெயலலிதாவும் இருந்த வரை, அவர்களின் கட்சியினர் எதிரும் புதிருமாக இருந்தனர். இருவரும் இறந்த பிறகு, அந்த நிலை மாறி விட்டது. திமுகவின் மாவட்ட செயலாளர்களும், எம்எல்ஏக்களும் அமைச்சர்களுடன் இணக்கமான உறவை வளர்த்து கொண்டனர். அதன் பலனாக, அரசு பணிகளுக்கான டெண்டர்கள், எம். சாண்ட் குவாரிகள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்ட பணம் கொழிக்கும் தொழில்களை செய்யும் அதிர்ஷ்டம் திமுக நிர்வாகிகளுக்கு கிடைத்தது. சட்டசபையில், நேரடியாகவே அமைச்சர்களை சந்தித்து, கோரிக்கை வைத்து காரியம் சாதித்து வந்தனர். ஆட்சியில் இல்லாததால், வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் உடன்பிறப்புக்கள், நாலு காசு பார்க்கட்டுமே என்று அறிவாலயமும் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X