Advertisement

இன்றைய சினிமா ரவுண்ட் அப் | 19- 02-2021 | Cinema News Roundup | Dinamalar Video

சினிமா வீடியோ பிப்ரவரி 19,2021 | 07:25 IST

Share

வழி மாறி சென்ற அஜித் சினிமாவை தாண்டி பைக், கார் ரேஸ், போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல் போன்றவற்றில் ஆர்வமிக்கவர் நடிகர் அஜித். கடந்தாண்டு முதல் சென்னை ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் வேப்பரியில் உள்ள புதிய கமிஷனர் அலுவலகத்திற்கு திடீரென வந்தார் அஜித். இதனால் அங்கு பரபரப்பானது. அங்கிருந்த போலீசார் அவரிடம் என்ன விஷயம் என கேட்டுள்ளனர். அப்போது தான் எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்தில் இயங்கி வரும் ரைபிள் கிளப்பிற்கு செல்வதற்கு பதிலாக இங்கு மாறி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை வழியனுப்பி வைத்தனர். வாடகை காரில் அஜித் வந்ததால் கார் ஓட்டுனர் இங்கு மாறி அவரை அழைத்து வந்தது தெரிய வந்தது. முன்னதாக அங்கிருந்த போலீசார் உட்பட பலரும் அஜித்துடன் செல்பி எடுத்தனர். வாய்மையே வெல்லும் - விஷால் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடித்து தயாரித்துள்ள சக்ரா படம் இன்று வெளியாகும் நிலையில் இப்படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை சென்னை ஐகோர்ட் நீக்கியது. இதுகுறித்து, எப்போதும் போல தடைகள், பிரச்சினைகளை சந்தித்தேன். எனக்கும், என் தொழிலுக்கும், சினிமா உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் உண்மையுடன் இருந்திருக்கிறேன். தயாரிப்பாளர் மட்டுமல்லாது இப்படம் தொடர்புடைய எல்லோரின் நலனையும் மனதில் வைத்து தடையை நீக்கிய கோர்ட்டிற்கு நன்றி. திட்டமிட்டப்படி படத்தை வெளியிடுகிறோம். வாய்மையே என்றும் வெல்லும்" என விஷால் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X