Advertisement

ஓட்டு வங்கியை வெற்றியாக்க திட்டம்

அரசியல் பிப்ரவரி 19,2021 | 10:20 IST

Share

கன்னியாகுமரி, கோவைக்கு அடுத்தபடியாக, பாஜகவுக்கு ஓட்டு வங்கி உள்ள மாவட்டம் ராமநாதபுரம். அதனால், லோக்சபா தேர்தலில் நயினார் நாகேந்திரனை களமிறக்கினர். அவர் ஜெயிக்கவில்லை. ஆனால், மற்ற சட்டசபை தொகுதிகளைவிட பரமக்குடியில், எதிர் வேட்பாளர் நவாஸ்கனியை விட, 17 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றார். பரமக்குடி இடைத்தேர்தலில் போட்டியிட்ட, அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரனுக்கு, 14 ஆயிரம் ஓட்டுகளே கூடுதலாக கிடைத்தது. இதனால், ரிசர்வ் தொகுதியான பரமக்குடியில், தங்களுக்கு ஓட்டு வங்கி பலமாக உள்ளது என்கிறது பாஜக. அதோடு, அதிமுகவின் ஓட்டு வங்கியும் சேர்ந்தால் வெற்றி நிச்சயம் தானே. இத்தொகுதியில் அதிகமாக உள்ள தேவேந்திர குல வேளாளர்களின் ஆதரவு பாஜகவுக்கு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. இதை எல்லாம் கருத்தில் கொண்டுதான், பரமக்குடியில் போட்டியிடலாம் என்று மாநில பாஜக தலைவர் முருகன் முடிவு செய்து இருக்கிறாராம். ‛நம்ம ஊரு பொங்கல்' விழாவுக்கு ராமநாதபுரத்தை தேர்வு செய்தார் முருகன். விழாவை பிரம்மாண்டமாக நடத்தினார். அவரை வரவேற்க மாநாடு போல் மக்கள் திரண்டனர். புல்லரித்த முருகன், மடை திறந்த வெள்ளம் என முக்கால் மணி நேரம் பேசினார். கூட்டி கழிச்சு பார்த்தால், பாஜகவின் வெற்றி கணக்கு சரியாக வரும் என்றுதான் சொல்கிறார்கள்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X