Advertisement

மக்கள் ஓட்டம்; பரபரப்பு வீடியோ

அரசியல் பிப்ரவரி 19,2021 | 12:20 IST

Share

தேர்தல் நெருங்கும் நிலையில் ஒவ்வொரு கட்சியின் ஐடி பிரிவினரும் எதிரணியை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை போட்டு வருகின்றனர். இது, பயங்கர அடிதடியில் முடிந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி 21ம் தேதி கரூர் வருகிறார். அவரை பிரமாண்டமாக வரவேற்க பேனர்கள், வளைவுகள் என அதிமுகவினர் தடபுடல் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திமுகவினர் இதை சமூக வலைதளங்களில் கேலி செய்தனர். முதல்வரை பற்றி கிண்டல் மீம்ஸ் போட்டுள்ளனர். இதுதொடர்பாக இரு தரப்புக்கும் பிரச்னை உண்டானது. அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் நவீன் குமார் உள்ளிட்ட மூன்று பேர் நேற்றிரவு கரூர் ஜவகர் பஜார் வீதியில் நடந்து சென்றபோது 50க்கு மேற்பட்ட திமுகவினர் திடீரென சரமாரியாக தாக்கினர். போலீசார் தடுக்க முயன்றபோதும் திமுகவினர் அடங்கவில்லை. நெரிசல் மிக்க சாலையில் பயங்கர அடிதடியைக் கண்டதும் மக்கள் அலறியடித்து ஓடினர். நவீன் குமார் உட்பட மூன்று அதிமுகவினரும் படுகாயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தோல்வி பயத்தால் திமுகவினர் வன்முறையில் இறங்குகின்றனர்; இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்னாவது? என அதிமுக நிர்வாகி ஆவேசமாக கேட்டார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X