Advertisement

கேள்வி கேட்காமல் வங்கி விவரங்களை தந்த ஷியாமலா கதறல்

சம்பவம் பிப்ரவரி 19,2021 | 17:52 IST

Share

சென்னை குரோம்பேட்டை அடுத்த சிட்லபாக்கத்தை சேர்ந்த கண்ணன் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் . இவரது மனைவி ஷியாமலாவுக்கு , தெரியாத நம்பரில் இருந்து கால் வந்தது . போன் எடுத்ததும் ஒருவர் பேசினார் . நீங்க அகவுண்ட் வச்சு இருக்க இந்தியன் பேங்க் மேனேஜர் பேசுறேன்ம்மா என்றார். தனக்கு கால் செய்த காரணத்தை கேட்டார் ஷியாமலா . மத்திய அரசு திட்டத்தின் கீழ் உங்களுக்கு பல கோடி பணம் வர போகுது . அத சொல்ல தான் கால் பன்னேன் என்றார். ஷியாமாலாவுக்கு முதலில் சந்தேகம் வந்தது . பக்கத்து வீட்டுக்காரர் இந்தியன் வங்கியில் தான் வேலை செய்றாரு . அவர் கிட்ட இத டீடெயில்லா சொல்லுங்க என்றார். ஆனால் யாரிடமும் இந்த தகவலை சொல்ல வேண்டாம் என்ற மேனேஜர் , உங்க அகவுண்ட் நம்பர் கொடுங்க என்றார். எந்த கேள்வியும் கேட்காமல் , எல்லா விவரங்களையும் ஒப்பித்தார் ஷியாமலா. அவர் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி அனுப்பப்பட்டது . அதையும் போன் செய்தவரிடம் தெரிவித்தார். கொரோனா காலம் என்பதால் , வங்கியில் இருக்கும் பணத்தை எடுத்து உங்க வீட்டுக்கே வந்து கொடுக்குறேன் என்றார். அதற்கும் தலை அசைத்தார் ஷியாமலா . நாளைக்கு கால் செய்றேன் என காலை கட் செய்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X