பொது பிப்ரவரி 23,2021 | 13:25 IST
கட்டுப்பாடுகளற்ற ரயில் பயணம், தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி என அண்மையில் அரசுகள் தாராளம் காட்டின. கொரோனா போய்விட்டதாக நினைத்து மக்கள், மாஸ்க்கை தூக்கி எறிந்தனர். சமூக இடைவெளி மறந்தனர். விளைவு? கடந்த ஒரு வாரத்தில் பெட்ரோல் விலையுடன் போட்டிபோட்டுக்கொண்டு கொரோனா பாதிப்பும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரம் பேர் இந்தியாவில் கொரோனாதொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 83 பேர் இறந்துள்ளனர். பாதிப்பில் ஐந்து மாநிலங்கள் முன் வரிசையில் உள்ளன. மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், சத்திஷ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களே அவை. மொத்த பாதிப்பில் 86 சதவீதம் பேர் இங்கு உள்ளனர். ஐந்து மாநிலங்களும் கொரோனா விதிகளை கடுமையாக அமுல் படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. -------------
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: